வாக்குப் பதிவு நாளில் நாளிதழில் அரசியல் கட்சிகள் விளம்பரம் செய்ய தடை இல்லை

By பிடிஐ

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 126-வது பிரிவின்படி, வாக்குப் பதிவு முடியும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவும் அது தொடர்பான விளம்பரங்களை மின்னணு ஊடகங்கள் வெளியிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒலிப்பெருக்கிகள் மூலமோ, டி.வி. மூலமோ பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது.

ஆனால் நாளிதழ்களுக்கு இந்தத் தடை பொருந்தவில்லை. இதனால், வாக்குப்பதிவு நாளிலும் அரசியல் கட்சிகள் வாக்குகள் கேட்டு விளம்பரங்கள் கொடுப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு மத்திய அரசுக்கு 2016-ல் கோரிக்கை வைத்தது. இது மத்திய சட்ட அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வாக்குப் பதிவு நாளில் நாளிதழ்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. எனவே, இந்த திட்டம் வரும் மக்களவைத் தேர்தலில் அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

வாழ்வியல்

7 mins ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்