அமிர்தசரஸில் போட்டியிட மன்மோகன் தயக்கம்

By செய்திப்பிரிவு

பஞ்சாபில் அமிர்தசரஸ் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிட வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைமை ஆர்வத்துடன் வலியுறுத்தி வருகிறது. மன்மோகன் சிங் போட்டியிட்டால் சீக்கிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் மாநில காங்கிரஸார் கருதுகின்றனர். ஆனால், மன்மோகன் சிங் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அமிர்தசரஸில் போட்டியிட அவர் தயங்குவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அமிர்தசரஸில் மன்மோகன் போட்டியிட கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி மன்மோகன் சிங் அப்போது மறுத்துவிட்டார். 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டி யிட்ட மன்மோகன் சிங், பாஜக வேட்பாளர் வி.கே.மல்கோத் ராவிடம் தோல்வியடைந்தார். 1991-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங் களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதியுடன் முடிகிறது. இப்போது, அசாமில் காங்கிரஸுக்கு போதிய பலம் இல்லாததால் அசாமில் இருந்து மன்மோன் சிங்கை மீண்டும் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்