கள நிலவரம்: தருமபுரி தொகுதி யாருக்கு?

By செய்திப்பிரிவு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வென்ற இரண்டு தொகுதிகளில் தருமபுரியும் ஒன்று. பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி போட்டியிட்டு அதிமுகவை வீழ்த்தினார்.

பாமகவுக்கு வலிமையான வாக்கு வங்கி உள்ள தொகுதி. கூட்டணி பலத்தை தாண்டி தனிப்பட்ட முறையில் பாமக செல்வாக்குடன் இருப்பதால் வெற்றி அல்லது இரண்டாவது இடத்தை தொடர்ந்து கைப்பற்றி வந்துள்ளது. 1989-ம் ஆண்டு தேர்தல் முதலே பாமக இங்கு தனது வாக்கு வங்கியை நிரூபித்து வருகிறது. பாமக சார்பில் பாரிமோகன், பு.த.இளங்கோவன், செந்தில் என பலர் இங்கு எம்.பி.யாக இருந்துள்ளனர். மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்படி ராமமூர்த்தியும் இந்த தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வாகியுள்ளார்.

இந்த மக்களவைத் தேர்தலில், அன்புமணி ராமதாஸ் (பாமக), எஸ். செந்தில் குமார் (திமுக),  பழனியப்பன் (அமமுக) ராஜசேகர் (மநீம), ருக்மணிதேவி (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான மொரப்பூர் ரயில்பாதை திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்ற கேள்வியை மக்கள் முன் வைக்கின்றனர். அதிமுகவின் செல்வாக்குடன் வலிமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளார் அன்புமணி. இருப்பினும் 5 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த அவர் சாதித்தது என்ன? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் திமுகவினர்.

இதனால் அன்புமணியா, எஸ்.செந்தில் குமாரா என்று கணிக்க முடியாத அளவுக்கு போட்டி கடுமையாக உள்ளது.

தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு

தருமபுரியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்  செந்தில் குமாரை விட வேகப் பாய்ச்சலில் முன்னேறி முதலிடத்தில் உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. திமுகவின் செந்தில் குமார் இரண்டாம் இடத்திலும் அமமுகவின் பழனியப்பன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் அடுத்தடுத்த இடங்களில் குறைந்த அளவு வாக்கு சதவீதத்தில் உள்ளன.

 

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

https://www.kamaden

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்