கடலூர் மக்களவைத் தொகுதி

By நெல்லை ஜெனா

தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த தொகுதி, நெய்வேலி என்எல்சி நிறுவனம், கடலூர் துறைமுகம் என பல அடையாளங்களை கொண்டது. என்எல்சி நிறுவனமும், அதன் துணை நிறுவனங்களிலும் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த தொகுதியில் வசிக்கின்றனர்.

கடலூர் துறைமுகமும், மீன்பிடித் தொழிலும் முக்கிய வருவாய் ஈட்டும் தொழிலாக உள்ளன. பண்ருட்டி பகுதியில் விளையும் முந்திரி முக்கிய விவசாயமாக இருந்து வருகிறது. முந்திரி ஏற்றுமதியும் இந்த பகுதியில் அதிகஅளவில் நடைபெறுகிறது. குறிப்பிட்ட சில நகரங்களை தவிர பொதுவாக கிராமப்புற பகுதிகளே இங்கு அதிகம்.

கடலூர் தொகுதியை பொறுத்தவரையில் நீண்டகாலமாகவே காங்கிரஸ் வென்று வரும் தொகுதியாக இருந்துள்ளது. கூட்டணியிலும் காங்கிரஸுக்கே அதிகமுறை இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஓரிருமுறை இங்கு வென்றுள்ளன. எனினும் இருகட்சிகளும் வழக்கமாக இந்த தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை.

 

இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

 

கடலூர்

பண்ருட்டி

நெய்வேலி

விருதாச்சலம்

திட்டக்குடி (எஸ்சி)

குறிஞ்சிபாடி

 

தற்போதைய எம்.பி

அருண்மொழி தேவன், அதிமுக

 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

 

கட்சிவேட்பாளர்வாக்குகள்
அதிமுகஅருண்மொழி தேவன், அதிமுக481429
திமுகநந்தகோபால கிருஷ்ணன்278304
தேமுதிகஜெயசங்கர்147606
காங்அழகிரி26650
சிபிஐபாலசுப்பிரமணியன்11122

 

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்

 

கடலூர் : சம்பத், அதிமுக

பண்ருட்டி : சத்யா, அதிமுக

நெய்வேலி : சபா, ராஜேந்திரன், திமுக

விருதாச்சலம் : கலைச்செல்வன், அதிமுக

திட்டக்குடி (எஸ்சி) : கணேசன், திமுக

குறிஞ்சிபாடி : எம்.ஆர்.கே. பன்னீ்ரசெல்வம், திமுக

 

முந்தைய தேர்தல்கள்

 

ஆண்டுவென்றவர்2ம் இடம்
1971ராதாகிருஷ்ணன், காங்முத்துகுமரன், ஸ்தாபன காங்
1977பூவராகவன், காங்ராதாகிருஷ்ணன், ஸ்தாபன காங்
1980முத்துகுமரன், காங்அரவிந்த பாலா பஜானோர், அதிமுக
1984வெங்கடேசன், காங்ராமு, திமுக
1989வெங்கேடசன், காங்பாஸ்கரன், திமுக
1991கலிய பெருமாள், காங்பூவராகவன், ஜனதாதளம்
1996வெங்கடேசன், தமாகாசாந்தமூர்த்தி, காங்
1998தாமோதரன், அதிமுகவெங்கடேசன், தமாகா
1999ஆதிசங்கர், திமுகதாமோதரன், அதிமுக
2004வேங்கடபதி, திமுகராஜேந்திரன், அதிமுக
2009கே.எஸ். அழகிரி, காங்சம்பத், அதிமுக

 

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 

இரா.கோவிந்தசாமி (பாமக)

டி. ஆர். வி. எஸ் ஸ்ரீரமேஷ் (திமுக)

கார்த்திக் (அமமுக)

அண்ணாமலை (மநீம)

சித்ரா (நாம் தமிழர்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

விளையாட்டு

14 mins ago

இணைப்பிதழ்கள்

40 mins ago

தமிழகம்

50 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்