காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்படும்: தஞ்சை பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா உறுதி

By செய்திப்பிரிவு

அதிமுக அங்கம் பெறும் மத்திய ஆட்சி அமையும் போது காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்பதை நான் உறுதியளிக்கிறேன் என்றார் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை மாலை நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட் டத்தில் அவர் மேலும் பேசியது:

“தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனம் ஆக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்துக்கு வித்திட் டவர் இந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு.

இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால், நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிடக் கூடிய சூழல் ஏற்படும். வளமான டெல்டா பகுதிகள் வறண்ட பாலை வனமாக ஆகிவிடும். விவசாயி களின் வீழ்ச்சியில் தொழில் வளர்ச்சியை எனது அரசு ஊக்கு விக்காது.

தன்னலத்துக்காக மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருவதில் வல்லவர் இந்தத் தொகுதியின் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. இந்தக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்.

இக்கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள்தான் செல்ல முடியும். இதுபோன்ற சிறிய கப்பல்கள் மிகவும் குறைவு. தற்போது உலகில் ஆழம் அதி கம் கொண்ட கப்பல்கள்தான் வடிவ மைக்கப்படுகின்றன. சேது சமுத் திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறை முகத்திற்கு வர முடியும் என்பதும், இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய்.

டி.ஆர். பாலு நிறுவனத்துக்குச் சொந்தமாக என்ன வகையான கப்பல்கள் இருக்கின்றன என்றும், அவற்றின் ஆழம் என்ன என்றும், அவை சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்ல முடியுமா என்றும், சேது சமுத்திரத் திட்டத்தால் அந்த நிறுவனத்திற்கு எத்தகைய லாபம் கிடைக்கும் என்றும் டி.ஆர்.பாலு தெரிவிக்க வேண்டும்.

இதே போன்று, வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத் துள்ளார் கருணாநிதியின் மகள் கனிமொழி. அந்த நிறுவனமும் கப்பல் சரக்கு போக்கு வரத்துத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, இவர்களின் தொழில் வளத்தைப் பெருக்கத்தான் சேது சமுத்திரத் திட்டம். மொத்தத்தில் இது ஒரு சுயநலத் திட்டம்.

அரசுப் பதவியை பயன்படுத்தி ஆதாயம் தேடுவதில் வல்லவர் டி.ஆர். பாலு. இவரது மகன்களின் பெயரில் உள்ள கிங்க்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் மற்றும் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப் பரேஷன் நிறுவனங்களுக்கு கூடு தல் எரிவாயு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி யவர் டி.ஆர்.பாலு” என்றார் ஜெயலலிதா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்