தேர்தல்: ஏப்ரல் 24-ம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலில் கோயம் பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் சென்னை- கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்ப டுவதாக வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, சென்னை- கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசகர் வி.ஆர். சவுந்தரராஜன் தெரிவித்ததாவது:

கோயம்பேடு சந்தையில் 4 ஆயிரம் காய்கறி அங்காடிகள், 2 ஆயிரம் பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள் என 6 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடை களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர் களில், கணிசமானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள், தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, தேர்தல் நாளில் கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அளிக்க கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்