காங்கிரஸ் வேட்பாளர் சட்டையில் கட்சி சின்னம்: விளக்கம் கோரியது தேர்தல் ஆணையம்

By செய்திப்பிரிவு

வாரணாசியில் வாக்களிக்க வந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் தனது சட்டையில் காங்கிரஸ் சின்னமான கை சின்னத்தை அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வாரணாசி தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மக்களவைக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் இன்று காலை தொடங்கியது.

வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் வாக்களித்தார். வாக்குச்சாவடிக்கு கட்சி சின்னத்தை சட்டையில் அணிந்து வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அது குறித்து கேட்டதற்கு: "ஒரு வேட்பாளராக என் கட்சி சின்னத்தை அணிய எனக்கு உரிமை இருக்கிறது. நான் என் கட்சி சின்னத்தை இதயத்தில் சுமந்துள்ளேன்" என்றார்.

பிரவீண்குமார் உறுதி:

இந்நிலையில் இது குறித்து வாரணாசி தேர்தல் பார்வையாளர் பிரவீண்குமார் கூறுகையில்: மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 130-ன் கீழ் வாக்குச்சாவடிக்கு வேட்பாளர் கட்சி சின்னத்தை அணிந்து வருவது தேர்தல் விதிமுறை மீறலாகும். இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் இருந்து சிசிடிவி வீடியோ பதிவை கோரியுள்ளோம். வீடியோ பதிவு வந்தவுடன் அதை ஆராய்ந்து பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையமும் விளக்கம் கோரியுள்ளது. விரைவில் அறிக்கை அனுப்பிவைக்கப்படும்".இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

8 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்