ஆந்தராவில் தெலுங்கு தேசம்-பாஜ கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் தெலுங்கு தேசமும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.

ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கூட்டணி அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு தெலுங்குதேசம், பாஜக இடையே கடந்த சில வாரங்களாக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இப்போது தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை சந்திரபாபு நாயுடுவை பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறி விப்பை இரு கட்சித் தலைவர் களும் ஹைதராபாதில் ஞாயிற்றுக் கிழமை கூட்டாக அறிவித்தனர். தொகுதி உடன்பாடு குறித்து சந்திரபாபு நாயுடு கூறும்போது, “சீமாந்திரா பகுதியில் 5 மக்கள வைத் தொகுதிகள், 15 சட்டமன் றத் தொகுதிகளில் பாஜக போட்டி யிடும். இதேபோல் தெலங்கானா வில் 8 மக்களவைத் தொகுதிகள், 47 சட்டமன்றத் தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

தெலங்கானாவில் பாஜகவுக்கு கூடுதல் இடங்கள்

தெலங்கானா இறுதிக்கட்ட போராட்டத்தின்போது ஒருங் கிணைந்த ஆந்திரத்தை சந்திர பாபு நாயுடு வலியுறுத்தினார். இதுதொடர்பாக டெல்லி, ஹைதரா பாதில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அவர் நடத்தினார்.

இதனால் தெலங்கானா பகுதி யில் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. இதனால் சீமாந்திராவைவிட தெலங்கானாவில் பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பேட்டியின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப் பாளரும் அகாலிதளம் எம்.பி.யுமான நரேஷ் குஜ்ரால் உடன் இருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்