வதேரா நில பேர வீடியோ: பிரியங்காவுக்கு பாஜக பதிலடி

By செய்திப்பிரிவு

நாட்டை ஆள்வதற்கு 56 இஞ்ச் மார்பு தேவையில்லை என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அதற்கு பதிலடியாக ராபர்ட் வதேரா நில பேர விவகாரம் தொடர்பான வீடியோ ஆதாரத்தை பாஜக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

பாஜக தலைமை அலுவலகத் தில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமாத் ஸ்ரீ என்ற பெயரில் ஒரு குறும்படம் வெளியிடப் பட்டது. ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங் கிரஸ் தலைமையிலான அரசு கள், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு முறைகேடாக நிலம் வாங்கு வதற்கு உதவி செய்ததாகவும் இதன்மூலம் அவர் ரூ.300 கோடி லாபம் ஈட்டியதாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், "வதேரா நில உச்சவரம்பு சட்டத்தை மீறி யுள்ளார். இதன்மூலம் லாபம் ஈட்டியுள்ளார். இந்த நில பேரத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சி யின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உறுதுணையாக இருந்துள்ளனர். எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து சோனியா வும் ராகுலும் விளக்கம் அளிக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்