பிளஸ் 2 ஆங்கில பாடத்தேர்வு - 49,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை

By செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 13-ம்தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆங்கிலப் பாடத்தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில் 3,185 மையங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 44 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

மொத்தம் 90 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் கூறினர்.

மாணவர்கள் இடைநிற்றல்: இதற்கிடையே, முதல் நாளில் நடந்தமொழிப்பாடத் தேர்வில் 50,674 மாணவர்கள் பங்கேற்வில்லை. அதேபோல, நேற்று நடந்த ஆங்கில பாடத் தேர்விலும் 49 ஆயிரம் பேர் வரை பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளில் பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 4 சதவீத அளவிலேயே இருந்தது.

கரோனா தொற்றுக்கு பிறகு, அந்த விகிதம் உயர்ந்து தற்போது 6 சதவீதத்தை எட்டியிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாணவர்கள் இடைநிற்றலே முக்கிய காரணம் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மறுபுறம் இந்த விவகாரம் சர்ச்சையானதால் முறையான புள்ளிவிவரங்களை வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகளும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பிளஸ் 1 ஆங்கிலப் பாடத்தேர்வு இன்று (மார்ச் 16) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

29 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

40 mins ago

வாழ்வியல்

31 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்