சென்னை | போக்குவரத்து காவலர் மர்ம மரணம்: அதிகாரிகள் ‘டார்ச்சர்’ செய்ததாக வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ராயபுரம் காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவலர் மர்மமான முறையில் இறந்தார். முன்னதாக அவர் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் இருவரும் தன்னை டார்ச்சர் செய்ததாக இறப்பதற்கு முன்னர் வெளியிட்ட ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் முதல்நிலை காவலர் லோகேஷ் (38). இவருக்கு ஷாலினி என்ற மனைவியும், மகனும்,மகளும் உள்ளனர். அமைந்தகரை, மணலி, எண்ணூர் உட்பட பல காவல் நிலையங்களில் லோகேஷ் பணியாற்றியுள்ளார். இறுதியாக கோட்டை போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதனால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பெரவள்ளூர் காவல் நிலையகுற்றப்பிரிவுக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கான உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டிஜிபியிடம், அவரது மனைவி ஷாலினி மூலம் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டு கழிவறைக்கு சென்ற லோகேஷ் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்தபோது லோகேஷ் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராயபுரம் போலீஸார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவலர் லோகேஷ் இறப்பதற்கு முன்னதாக காவல் துணை ஆணையர் ஒருவருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில், லோகேஷ் கூறியிருப்பதாவது:

கோட்டை போக்குவரத்து காவல்ஆய்வாளர் கருணாகரன் என்னைதனிப்பட்ட முறையில் பழிவாங்குகிறார். மன உளைச்சல் கொடுக்கிறார். எனக்கு வேறு வழியில்லை. குடும்பத்தினருடன் உங்கள் அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. போக்குவரத்து காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர் ஜாதி ரீதியாக என்னை டார்ச்சர் செய்தனர்.

அதனால்தான் மருத்துவ விடுப்பு எடுத்தேன். நான் மருத்துவ விடுப்பு முடிந்து வருவதற்கு முன்னரே என்னை பணியிட மாறுதல் செய்து விட்டனர். நான் இறந்துவிட்டால் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆணையர் சம்பத் பாலன் இருவரையும் விட மாட்டேன்.

நான் பணியிலிருந்தபோது ஆய்வாளர் கருணாகரன் வாரத்தில் ஒருநாள் 100 லிட்டர் டீசல் திருடசொன்னார். உதவி ஆணையருக்கு 20 லிட்டர், 80 லிட்டர் அவருக்குதிருடி கொடுக்க சொன்னார். நான்செய்யவில்லை. இதனால், என்னை பழிவாங்குகின்றனர்.

தினமும் என் வீட்டுக்கு 4 போலீஸாரை அனுப்பி தொந்தரவு கொடுத்து வருகின்றனர். போக்குவரத்து ஆய்வாளர் நீலாங்கரையில் இருக்கும்போது தினமும் 15 ஆயிரம் சம்பாதித்தாராம். தற்போது அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியவில்லையாம். உதவி ஆணையர் சம்பத் பாலனுக்குமாதம் ரூ.5 லட்சம் வருகிறது. போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு ரூ.1.5 லட்சம் வருகிறது. குமார் இதை வசூலித்து கொடுக்கிறார். விதி மீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் மிஷினில் முறைகேட்டில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு அந்த ஆடியோவில் காவலர் லோகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்