பெட்ரோல் குண்டு வீச்சு வழக்குகளில் கைதானவர்களிடம் விசாரிக்க கோவை போலீஸ் முடிவு

By செய்திப்பிரிவு

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக கைதாகி சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பதிவான வழக்குகளில் ஒரு வழக்கை தவிர, மற்ற அனைத்து வழக்குகளிலும் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் கூடுதல் தகவல்களை பெற வேண்டியுள்ளதால், அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 500 காவலர்கள் திரும்பப் பெறப்பட்டனர். மற்றவர்களும் படிப்படியாக குறைக்கப்படுவர். மாநகரில் மத நல்லிணக்கக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

14 mins ago

சினிமா

19 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்