கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸார், பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் எஸ்ஐ தென்னரசு மற்றும் போலீஸார், கிருஷ்ணகிரி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒரப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணியளவில், அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 50 கிலோ அளவிலான, 40 மூட்டைகளில் 2000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வேனை ஓட்டிவந்த திருப்பத்தூர் மாவட்டம் சின்னபசலிக்குட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரைக் கைது செய்து, ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கிச் சென்று, கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (27) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்