சென்னையில் ரூ.352.3 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி: வரி ஆலோசகர் உட்பட 7 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னையில் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ரூ.352.3 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்ட வரி ஆலோசகர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை சென்னை மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மோசடியில் ஈடுபடும் நபர்களை ஜிஎஸ்டி ஆணையரக அமலாக்கப்பிரிவு கண்காணித்து வருகிறது. இதில் சென்னையில் 24 போலி நிறுவனங்கள் மூலம் போலி ரசீதுகள் தாக்கல் செய்து ரூ.299 கோடியும், இதர நிறுவனங்களுக்கு சட்டவிரோத உள்ளீட்டு வரி கடனை வழங்கியதன் மூலம் ரூ.53.35 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டெக்னிக்கல் பிரிவு உதவியோடு நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல் முறையாக, ஒட்டுமொத்த கும்பலையும் (அதன் மூளையாகச் செயல்பட்டவர் உட்பட), அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. தீவிர விசாரணை, பல்வேறு இடங்களில் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, உரிய ஆதாரங்களைத் திரட்டி சிறப்பாக ஜிஎஸ்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

கடந்த 12-ம் தேதி அனைவரையும் ஜிஎஸ்டி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இதர நபர்களின் கேஒய்சி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி செய்ததும், போலி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி பதிவு உள்ளிட்டவற்றை வரி ஆலோசகர் செய்து தந்ததும் விசாரணயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கடன் மோசடிகளுக்காகவே தொடங்கப்பட்ட இந்தப் போலி நிறுவனங்கள், சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகளைப் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன. இவற்றின் மூலம் பலனடைந்த நிறுவனங்கள் குறித்தும், வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எழும்பூரில் உள்ள பொருளாதாரக் குற்றங்களுக்கான நீதிபதி II முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்பு ஏழு பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதால், மோசடியின் மதிப்பு இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 secs ago

ஆன்மிகம்

10 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்