இலங்கைக்கு கடத்தவிருந்த 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல் 

By கி.தனபாலன்

தொண்டி அருகே இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 2,325 கிலோ விரலி மஞ்சளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தும், இலங்கையிலிருந்து தங்க கட்டிகள் கடத்தி வருவதும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலுக்கு பின் கடந்த சில மாதங்களாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் (சமையல் மஞ்சள்) கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொண்டி அருகே காரங்காடு கடல் பகுதியிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் கியூ பிரிவு போலீஸார் காரங்காடு பகுதிகளில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரங்காடு கடற்கரை பகுதியில் பழைய கட்டிடத்தில் 93 மூடைகளில் சுமார் 2,325 கிலோ மஞ்சள் இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதனை கியூ பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலான போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தங்கச்சிமடத்தைச் சேர்ந்த இன்னாசி, ராமேசுவரத்தைச் சேர்ந்த ராஜூ ஆகியோரை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

8 mins ago

இந்தியா

48 mins ago

வர்த்தக உலகம்

56 mins ago

ஆன்மிகம்

14 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்