வடலூரில் பேச மறுத்த பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைப்பு: நடத்துநர் கைது

By ந.முருகவேல்

வடலூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமான பெண் தன்னுடன் பேச மறுத்ததால் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துக் கொலை செய்ய முயற்சித்த தனியார் பேருந்து நடத்துநரை பொதுமக்கள் பிடித்து வடலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் தரப்பில் தெரிவித்ததாவது:

''கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ஜான்விக்டரின் மனைவி சலோமி (26). இவர் வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். நெய்வேலியில் இருந்து வடலூருக்கு தினந்தோறும் தனியார் பேருந்தில் சென்று வந்தபோது, அந்தப் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரியும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த அரசூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சுந்தரமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சுந்தரமூர்த்தியிடம், சலோமி பேச மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சுந்தரமூர்த்தி பலமுறை அவரைத் தொடர்ந்து சென்றபோதும், அவர் பேச மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்று (பிப்.21) காலை வழக்கம்போல் பணிக்குச் சென்ற சலோமி, தனது நிறுவனத்தில் இருக்கையில் இருந்தபோது, அங்கு பெட்ரோல் கேனுடன் சென்ற சுந்தரமூர்த்தி, திடீரென சலோமி மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து, சலோமியை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்ப முயன்ற சுந்தரமூர்த்தியைப் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்''.

இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்