‘செந்தாழம் பூ முதல் ’நான் உன்ன நெனைச்சேன்’ வரை  - காலத்தால் அழியாத பாடல்களில் சரத்பாபு

By கலிலுல்லா

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழில் கவனத்துக்குரிய நடிகரான சரத்பாபுவின் காலத்தால் அழியாத பாடல்களின் தொகுப்பை பார்ப்போம்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் - முள்ளும் மலரும் (1978): இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரஜினி, சரத்பாபு, ஷோபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா’ பாடல் எவர் கிரீன் ஹிட். பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்திழுத்தன. கண்ணதாசன் பாடல் வரிகளில் யேசுதாஸ் குரலில் உருவான இப்பாடல் சரத்பாபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான பாடல்.

நான் உன்ன நெனைச்சேன் - கண்ணில் தெரியும் கதைகள் (1980): தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்பாபு, ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சங்கர் கணேசன் இசையில் வாலி எழுதிய காதல் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, வாணி ஜெய்ராம் செம்மைபடுத்தியிருப்பர். மெலோடியான இப்பாடல் காதலர்களிடையிலான பிரிவை அழகாக சொல்லியிருக்கும்.

கடவுள் நினைத்தான் - கீழ்வானம் சிவக்கும் (1981): இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் சிவாஜி, சரிதா, ஜெய்சங்கர், சரத்பாபு நடித்த இந்தப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசைமைத்திருந்தார். டி. எம். சௌந்தரராஜன் பாடும் இந்தப்பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. ஒரு காலத்தில் இப்பாடல் இடம்பெறாத திருமண வீடுகளே இல்லாத அளவுக்கு பிரபலமடைந்த பாடல். ‘மண மேடை தந்த மலர் போன்ற பெண்மை மணவாளன் கையில் விளையாட்டு பொம்மை’ போன்ற கண்ணாதாசனின் வரிகள் கவனம் பெற்றன.

ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983): கே.விஜயன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமல்ஹாசன், மாதவி, சரத்பாபு, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஒரு நண்பணின் கதை இது’ பாடல் பிரபலமானது. நெருங்கிய நண்பனை குத்திக்காட்டும் வகையிலான வாலியின் வரிகள் கூர்மையாக பாடலுக்கு அழகூட்டியிருக்கும்.

சின்ன சின்ன பூவே - சங்கர் குரு (1987): எல்.ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அர்ஜூன் சீதா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்ன சின்ன பூவே’ பாடலை யேசுதாஸ் பாடியிருப்பார். சரத்பாபு தன் மகளுக்காக பாடும் வகையிலான இப்பாடலில் வைரமுத்துவின் வரிகள் இனிமை சேர்த்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

உலகம்

17 mins ago

உலகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

31 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

மேலும்