மகளிர் மட்டும், அறம் படங்களுக்கு இசையமைப்பாளரான ஜிப்ரான்

By ஸ்கிரீனன்

'மகளிர் மட்டும்' மற்றும் 'அறம்' படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஜிப்ரான்.

கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அறம்'. 'குற்றம் கடிதல்' பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'மகளிர் மட்டும்'. சூர்யா தயாரித்துவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வருகிறது.

இவ்விரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் யார் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் " 'மகளிர் மட்டும்' மற்றும் 'அறம்' படங்களின் காட்சிகளைப் பார்த்தேன். இரண்டுமே தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தும் படங்களாக இருக்கும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விரண்டு படங்களுக்குமே ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதை படக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது. இப்படங்களைத் தொடர்ந்து வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இசையமைப்பாளராகவும் ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 mins ago

விளையாட்டு

56 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்