கமல் - ஷங்கர் பேச்சுவார்த்தை: இந்தியன் 2 உருவாக்க திட்டமா?

By ஸ்கிரீனன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க புதிய படத்துக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 'இந்தியன் 2' ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

'விஸ்வரூபம் 2' படத்துக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கமல். டிசம்பரில் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார்கள்.

அப்படத்தைத் தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' தொடங்கப்படும் என்று தகவல் வெளியானாலும், ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். கடந்த ஒரு மாத காலமாகவே கமல் - ஷங்கர் இருவருமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் தங்களுடைய படம் குறித்த அறிவிப்பையும் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்கள்.

இது குறித்து விசாரித்த போது, "கமல் - ஷங்கர் இருவரும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை தான். '2.0' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவுள்ள படத்தில் கமல் நடிப்பார். தயாரிப்பாளர் யார் என்பது மட்டும் விரைவில் இறுதியாகி விடும்" என்று தெரிவித்தார்கள். மேலும், இப்படம் 'இந்தியன் 2'-வாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினார்கள்.

சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 'இந்தியன் 2' படம் குறித்த தகவல் கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 min ago

வணிகம்

5 mins ago

சினிமா

2 mins ago

உலகம்

24 mins ago

வணிகம்

30 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்