சினிமாவை விட அரசியல் நிறைய தெரிய வேண்டும்: விஜய் சேதுபதி

By ஸ்கிரீனன்

சினிமாவை விட அரசியல் நிறைய தெரிய வேண்டும் என்று அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வில் விஜய் சேதுபதி பேசினார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மறைவைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித், அனிதா உரிமை ஏந்தல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியதாவது:

கல்வி என்பது ரொம்ப அடிப்படைத் தேவை. அதற்காக ஒரு உயிரை இழந்துவிட்டு, வருத்தப்பட்டு சரி செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதுவே முதலில் அசிங்கமாக இருக்கிறது.

இதெல்லாம் கடந்து நம் மீது ஒரு அரசியல் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நம்மை முதலில் ஜாதி வாரியாகப் பிரிக்கிறார்கள். அதை முதலில் ஒழிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். நாம் ஏதோ போராட்டம் நடத்துவதும், பேசுவதும் அவர்களுக்கு கேட்டு கேட்டு பழகிவிட்டது என நினைக்கிறேன். இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது கூட அவர்களுக்குப் போய் சேருமா என்று தெரியவில்லை.

நான் ரொம்ப காலமாக கேட்டுக் கொண்டிருப்பது ஒரு விஷயம் தான். போராடுபவர்களை சமாளிப்பவர்கள் வளர்ந்துவிட்டார்கள். போராடும் போதே மாற்றம் வர வேண்டும் என நினைக்கிறேன். அனைவருமே ஒரே இடத்தில் கூடிப் போராட்டம் நடத்தினால், அதை எப்படிக் கலைப்பது என்று கற்றுக் கொண்டார்கள். அதைத் தாண்டி இந்தப் போராட்ட முறை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும்.

அடுத்த தலைமுறைக்கு அரசியல் பற்றிய அறிவை நிறைய ஊட்ட வேண்டும் என ஆசைப்படுகிறேன். சினிமாவை விட அரசியல் நிறைய தெரிய வேண்டும். அது ரொம்ப முக்கியம். வாட்ஸ்-அப்பில் பல வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதே போன்று இங்கியிருப்பவர்கள் யாராவது ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடம் வீடியோவாக தினமும் என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டும்.

இருக்கும் இடத்திலேயே அரசியல் பற்றிய பாடத்தையோ, அறிவையோ அடுத்த தலைமுறைக்குப் புகுத்த வேண்டும் என்பதும், ஜாதி ஒழிய வேண்டும் என்பதையும் விரும்பி கேட்டுக் கொள்கிறேன். ரொம்ப காலமாக இதெல்லாம் இந்த சமுதாயத்தைப் பிரித்து வைக்கிறது. நம்மைப் போராட தயங்க வைக்கிறது.

இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

6 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்