காதலர் தின வெளியீட்டில் எனை நோக்கி பாயும் தோட்டா

By ஸ்கிரீனன்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' காதலர் தின வெளியீடாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

இப்படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதில் மிகவும் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. விரைவில் ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு, இசையமைப்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அதில் '2017 காதலர் தின வெளியீடு' என படக்குழு குறிப்பிட்டுள்ளது.

இப்படத்தின் பணிகளை முடித்துவிட்டு, விக்ரம் நடிக்கவிருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் கவனம் செலுத்தவிருக்கிறார் கெளதம்மேனன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

42 mins ago

கருத்துப் பேழை

38 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

22 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

49 secs ago

மேலும்