நட்சத்திரம் நகர்கிறது சிறப்புக் காட்சி - பா.ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டிய அனுராக் காஷ்யப்

By செய்திப்பிரிவு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்தும் பேசுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தென்மா இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. யாழி ஃபிலிம்ஸ் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'நட்சத்திரம் நகர்கிறது'படத்தின் சிறப்புக்காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படம் பார்துவிட்டு வெளியே வந்தததும், அனுராக் காஷ்யப் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து படம் சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்