இரவின் நிழல் திரைப்படம் தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கம் - இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு

By செய்திப்பிரிவு

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை, 'தமிழ் சினிமாவின் கலங்கரை விளக்கம்' என இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.

ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'. ஒரே ஷாட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அவரே நடித்தும் வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது. ஒரு பத்ர காளியின் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் அதன்கீழே மண்டியிட பார்த்திபன் அலறுவது போல போஸ்டர் இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இரவின் நிழல் படத்தை ஒரு ஸ்பெஷல் ஷோவாக பார்த்திபன் அவருடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். ஆனால் அதைப் பார்த்த பலரும் பார்த்திபனை பாராட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''எடிட்டர் இல்லாத முதல் ஆசியத் தமிழ்படம்.ஒரே பதிவில் ( single shot) முன்னுக்கு பின்னான காலங்களை( Non- Lenoir) திரைக்கதை உத்தியில்,பார்த்திபன் தானும் நடித்து பலரை இயக்கிய முதல் சாதனை தமிழ் படம் .'இரவின் நிழல்' தமிழ்சினிமாவுக்கு வரலாற்று பெருமை, கலங்கரை விளக்கம்'' என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல சிம்புவின் 'பத்து தல' படத்தை இயக்கி வரும் ஒபேலி கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், ''பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருடைய கலையையும் அர்ப்பணிப்பையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஏ ஆர் ரஹ்மானின் பிஜிஎம் படத்திற்கு உயிரைத்தருகிறது. உயிர்ப்பையும் ஈடுபாடும் தருகிறது. ஆர்தர் வில்சனின் கேமரா மற்றும் கலை இயக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. படக்குழுவுக்கு பெரிய சல்யூட். இந்த படம் படைப்பாளிகளுக்கு பாடத்திட்டமாக இருக்கும், இது ஒரு உண்மையான சிங்கிள் ஷாட் திரைப்படம்." என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 mins ago

உலகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்