கே.வி.ஆனந்த் படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம்

By ஸ்கிரீனன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'அனேகன்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் கே.வி.ஆனந்த். அக்கதைக்கு பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இறுதியாக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அவரோடு டி.ராஜேந்தரும் இதில் நடிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, புகைப்படத்தோடு ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

கே.வி.ஆனந்த் படங்களில் வழக்கமாக கதை, திரைக்கதை, வசனத்தில் பங்கெடுக்கும் எழுத்தாளர்கள் சுபாவும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவான 'அயன்', 'கோ', 'மாற்றான்' மற்றும் 'அனேகன்' ஆகிய படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவர் ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்திற்கு அவர் தான் பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

9 mins ago

சினிமா

27 mins ago

வாழ்வியல்

9 mins ago

தமிழகம்

45 mins ago

க்ரைம்

52 mins ago

வணிகம்

56 mins ago

சினிமா

53 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்