'வீரமே வாகை சூடும்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் 'வீரமே வாகை சூடும்'. இப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் விஷாலுடன் பணிபுரிந்துள்ளனர். விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்திலும் சில காட்சிகளை சென்னையிலும் படமாக்கியுள்ளது படக்குழு.

இப்படம் கடந்த ஜன. 26 குடியரசு தினத்தன்று திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது. ஆனால் ஞாயிறு ஊரடங்கு, கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படத்துக்கான புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளார். அதன் படி இப்படம் வரும் பிப்ரவரி 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

க்ரைம்

26 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

25 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்