கார்த்திக் நரேனின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘நிறங்கள் மூன்று’ படப்பிடிப்பு தொடங்கியது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாறன்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் கார்த்திக் நரேன். இப்படத்தில் அதர்வாக நாயகனாக நடிக்கிறார். அவருடன் சரத்குமார், ரஹ்மான், சின்னி ஜெயந்த், ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ‘நிறங்கள் மூன்று’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கார்த்திக் நரேன், அதர்வா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்து இந்த ஆண்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்