'மோகன் தாஸ்' 2-வது லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

விஷ்ணு விஷால் நடித்து வரும் 'மோகன் தாஸ்' படத்தின் 2-வது போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எஃப்.ஐ.ஆர்'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்குப் பிறகு 'மோகன் தாஸ்' என்னும் படத்தைத் தயாரித்து நடித்து வந்தார் விஷ்ணு விஷால்.

'களவு' படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்து வந்தார்கள். 'மோகன் தாஸ்' படத்தின் படப்பிடிப்பும் முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனை முன்னிட்டு 'மோகன் தாஸ்' படத்திலிருந்து விஷ்ணு விஷாலின் புதிய லுக்கையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கு இணையத்தில் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ராஜகோபாலன், இசையமைப்பாளராக கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்