பாடல் காட்சிகள் லீக்: 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவினர் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பாடல் காட்சிகள் இணையத்தில் லீக்கானதால் 'திருச்சிற்றம்பலம்' படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'திருச்சிற்றம்பலம்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.

இதில் தனுஷ் - நித்யா மேனன் இருவரும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இருவரும் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளன. படப்பிடிப்புத் தளத்திலிருந்து யாரோ ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படம் என்றாலே கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அதையும் மீறி இவ்வாறு லீக்காகியுள்ளது. இதனால் கடும் அதிருப்தியில் இருக்கிறார் தனுஷ். படப்பிடிப்புத் தளத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துப் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. மேலும், இணையத்திலிருந்து காட்சிகளை நீக்குவதற்கும் பணிபுரிந்து வருகிறது.

'திருச்சிற்றம்பலம்' படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் - அனிருத் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்