விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சரியான வெளியீட்டுத் தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது அக்டோபர் 14-ம் தேதி ஆயுத பூஜை விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியாகவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
'எனிமி' படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது.
'எனிமி' படத்தின் பாடல்களை மட்டுமே தமன் உருவாக்கியுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago