எனக்கு உடனடியாக கதை பண்ண வராது: இயக்குநர் சசி நேர்காணல்

By கா.இசக்கி முத்து

‘சொல்லாமலே’, ‘பூ’, ‘555’ உட்பட பல படங்களை இயக்கிய இயக்குநர் சசி தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன்’ என்ற படத்தை எடுத்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் அவரைச் சந்தித்தோம்.

வித்தியாசமான பல பெயர்கள் இருக்கும்போது இப்படத்துக்கு ‘பிச்சைக்காரன்’ என்று எதற்காக பெயர் வைத்தீர்கள்?

இப்படத்தில் வாழ்க்கையில் பெரிய பணக்காரனாக இருக்கும் ஒருவன், சூழ்நிலை காரணமாக பிச்சைக்காரனாக இருக்கிறான். அவன் ஏன் பிச்சைக்காரன் ஆகிறான், அதிலிருந்து அவன் கற்றுக் கொண்டது என்ன என்பதை சுவாரசியமாக சொல்லி யிருக்கிறோம்.

படத்தின் தயாரிப்பாளர்தான் இதன் தலைப்பை முடிவு செய் தார். என் நண்பர்கள் உள்ளிட்ட பலர் தலைப்பு பிடிக்கவில்லை என் றார்கள். ஏன், எனக்கே இப்படத் தின் தலைப்பு முதலில் பிடிக்க வில்லை. ஆனால், இப்போது ட்ரெய்லர், பாடல்கள் என விளம்பரப்படுத்தும் போதுதான் இந்த தலைப்பு எவ்வளவு பெரிய பிளஸ் என்பது புரிந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இதற்கு இந்தத் இந்தத் தலைப்பை விட வேறு தலைப்பு பொருத்தமாக இருக்காது என்று நீங்களே சொல்வீர்கள். விஜய் ஆண்டனி நடித்து இதற்கு முன்பு வந்த படங்களை விட இப்படம் புதிதாக இருக்கும். திரையுலகில் பி, சி சென்டர் என்று சொல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் விஜய் ஆண்டனியை கொண்டு செல்லக்கூடிய படமாக இது இருக்கும்.

ஒரு படத்துக்கும் அடுத்த படத் துக்கும் இடையே இத்தனை இடை வெளி எடுத்துக்கொள்கிறீர்களே? ஏன் இப்படி ஆகிறது?

இயக்குநர் என்பவர் வருடத் துக்கு ஒரு படம் கொடுக்க வேண்டும். ஆனால், எனக்கு உடனடியாக கதை பண்ண வரவில்லை என்பதுதான் உண்மை. நடிகர்கள் தேதி கொடுக்கிறார்கள், தயாரிப்பாளர்கள் முன்பணம் கொடுக்கிறார்கள் என்பதற் காகவெல்லாம் நான் இதுவரை படம் பண்ணியதில்லை, பண்ண வும் மாட்டேன். இதுவரை நான் இயக்கிய எல்லா படங்களையும் புதுமையான களத்தில்தான் செய் திருக்கிறேன். நான் என்றைக்குமே பணத்தின் பின்னால் ஓடியதில்லை. ஓடவும் மாட்டேன்.

நாவலை மையமாக வைத்து படம் இயக்கிவிட்டீர்கள். குறும்படத்தை மையமாக வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?

ஒரு புகைப்படத்தை மைய மாக வைத்துக்கூட நல்ல படம் பண்ணலாம். குறும்படத்தை மையமாக வைத்தும் படம் பண்ணு வேன். அப்படி ஒரு கதைக்குத்தான் திரைக்கதை எழுதி வருகிறேன். அதே போல சிறுகதைகளை படமாக பண்ணுவதற்கும் இரண்டு கதைகளை தேர்வு செய்திருக்கிறேன்.

ஒருசிலர் வெளிநாட்டு படங் களின் உரிமையை வாங்காமல் அதை அப்படியே தமிழில் எடுக்கிறார்களே?

அது தவறான விஷயம். நான் அப்படி செய்ததில்லை. ஒரு வெளிநாட்டு படத்தில் ஒருசில காட்சிகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கலாம். அதைப் பயன்படுத்துவதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துவிட்டு அதைப் பயன்படுத்த வேண்டும். நான் அவ்வாறு வெளிநாட்டு படத்தில் இருந்து 2 காட்சிகளை என் படத்தில் வைத்தேன். அதற்கு நன்றி சொல்லி அப்படத்தின் டைட்டிலில் கார்டு போட்டேன். என் மனசாட்சிக்கு ஒத்துவராத எந்தவொரு விஷயத்தையும் நான் பண்ணமாட்டேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

வணிகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்