மாஸ்டர் தயாரிப்பாளரின் தயாரிப்பில் வாசுவின் கர்ப்பிணிகள்

By செய்திப்பிரிவு

'மாஸ்டர்' தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற புதிய படம் உருவாகி வருகிறது.

இந்த ஆண்டு பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்தவர் சேவியர் பிரிட்டோ. தற்போது எஸ்தர் எண்டர்டெய்னர் என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து வருகிறார்.

அதில் முதல் தயாரிப்பாக 'அழகிய கண்ணே' என்ற படம் தயாராகி வருகிறது. அதனைத் தொடர்ந்து 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற புதிய படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை 'பென்சில்' படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் இயக்கி வருகிறார்.

ஒரு மருத்துவர் தான் சந்திக்கும் விநோதமான நான்கு கர்ப்பிணிகள் பற்றிய கதையையும், அவர்களுடைய பிரச்சினைகளின் தீர்வையும் பேசவுள்ளார்கள். இதில் விஜய் டிவி புகழ் `நீயா நானா` கோபிநாத் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் பிரதான கதாபாத்திரங்களாக அனிகா, சீதா, வனிதா விஜயக்குமார், லெனா குமார், அபிஷேக், சச்சின், க்ரிஷிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஒளிப்பதிவாளராக பி.கே.வர்மா, எடிட்டராக விவேக் ஹர்ஷ, கலை இயக்குநராக ராஜ், இசையமைப்பாளராக விஷ்ணு மோகன் சித்தாரா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்