மருதநாயகம் படத்தை தயாரிக்கிறதா லைக்கா நிறுவனம்?

By ஸ்கிரீனன்

'மருதநாயகம்' படத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து, தயாரிக்க இருப்பதாக தொடங்கப்பட்ட படம் 'மருதநாயகம்'. அவரே இயக்குநர் பொறுப்பையும் ஏற்று இருந்தார். இப்படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் பங்கேற்றார். மிகப் பிரம்மாண்டமான முன்னோட்டக் காட்சிகள், தொடக்கவிழா என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் 'மருதநாயகம்'

நிதி நெருக்கடி காரணமக 'மருதநாயகம்' படம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் அளித்த பல பேட்டிகளில் 'மருதநாயகம்' பற்றிய கேள்விக்கு "அப்படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐங்கரன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று 'மருதநாயகம்' படத்தின் போஸ்டரை தனியாக வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால், மீண்டும் 'மருதநாயகம்' படத்தின் தயாரிப்பு குறித்த செய்திகள் இணையத்தை வட்டமிட்டு வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு கமல் அளித்த பேட்டியில், "லண்டனில் உள்ள தனது நண்பர் தொழிலதிபர் ஒருவர் அப்படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். பட்ஜெட் அதிகமாச்சே என்று கேட்டேன். அது என் கவலை. அத்தனை செலவையும் அந்தப் படம் தாங்கும். நானும் தான்" என்று கூறியிருந்தார்.

தற்போது லண்டனில் இருந்து தான் ஐங்கரன் மற்றும் லைக்கா நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐங்கரன் ட்விட்டர் பக்கத்தில் 'மருதநாயகம்' போஸ்டர் வெளியிடப்பட்டு இருப்பதால், லைக்கா நிறுவனம் அப்படத்தை தயாரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

சினிமா

6 mins ago

இந்தியா

59 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்