பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடிக்கும் ‘ரைட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யா நடிப்பில் ‘சார்பட்டா பரம்பரை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் ரஞ்சித்.

இவர் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் தயாரித்த ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தைத் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

இந்நிலையில் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் ஒன்றை பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘ரைட்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ப்ராங்க்ளின் ஜோசப் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளராக ப்ரதீப் காளிராஜா, எடிட்டராக மணிகண்டன் சிவகுமார் ஆகியோர் பணிபுரிகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஏப்.14) வெளியிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

வலைஞர் பக்கம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

37 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்