அட்லீ பட அப்டேட்: விஜய் மனைவியாக சமந்தா

By ஸ்கிரீனன்

அட்லீ இயக்கிவரும் படத்தில் விஜய்க்கு மனைவியாக சமந்தா நடித்து வருகிறார். இருவருக்கும் பிறந்த குழந்தையாக மீனாவின் மகள் நடித்திருக்கிறார்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

சென்னையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் - ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு மனைவியாக ஏமிஜாக்சனும், விஜய்க்கு உதவுபவராக சமந்தாவும் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இச்செய்தி குறித்து படக்குழுவினரிடம் விசாரித்த போது, "விஜய்க்கு மனைவியாக சமந்தா தான் நடித்திருக்கிறார். அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. ஏமி ஜாக்சன் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறோம்" என்று தெரிவித்தார்கள்.

மேலும், இப்படத்தில் விஜய் - சமந்தா இருவருக்கும் திருமணமாகி குழந்தை பிறப்பது போல ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்கள். காதல் ததும்பும் இப்பாடல் கண்டிப்பாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் என்கிறது படக்குழு. மீனாவின் மகள் நைனிகா இப்படத்தில் விஜய் - சமந்தா இருவருக்கும் குழந்தையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்