'சீயான் 60' படத்தின் நாயகியாக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சீயான் 60' என அழைத்து வருகிறார்கள். 'கோப்ரா' தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது இதில் நாயகியாக நடிக்க வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக 75 நாட்கள் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளது படக்குழு திட்டமிட்டுள்ளது.
75 நாட்கள் படப்பிடிப்பில் இடையே ஒரு சின்ன இடைவெளியை மட்டும் விடலாம் என முடிவு செய்துள்ளனர். ஆகையால், இந்த ஆண்டிற்குள் 'சீயான் 60' படமும் வெளியாகும் எனத் தெரிகிறது. அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விக்ரம் - துருவ் விக்ரமுடன் நடிக்கும் இப்படத்திற்கு இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
5 hours ago