ஜெயம் ரவி பழகுவதற்கு எளிமையானவர் - நிதி அகர்வால் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

ஜெயம் ரவி பழகுவதற்கு எளிமையானவர் என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார்.

லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பூமி'. திரையரங்க வெளியீட்டுக்குத் திட்டமிட்ட இந்தப் படம், கரோனா அச்சுறுத்தலால் பொங்கல் பண்டிகை அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் நடித்த அனுபவம் குறித்து நடிகை நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஜெயம் ரவி பழகுவதற்கு எளிமையானவர். படப்பிடிப்புத் தளங்களில் அவரோட இருக்கும் சூழல் எந்த வித சங்கடமும் இல்லாமல் இருக்கும். எனக்கு அது கற்றுக் கொள்வதற்கான ஒரு அனுபவமாக இருந்தது. அவரோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். எங்கள் ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது என்பது மகிழ்ச்சியை தருகிறது. படத்தை காண நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நிதி அகர்வால் மிஸ்டர் மஜ்னு, இஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவுடன் அவர் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

வலைஞர் பக்கம்

6 mins ago

சினிமா

11 mins ago

சினிமா

16 mins ago

இந்தியா

24 mins ago

க்ரைம்

21 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்