'நாங்க ரொம்ப பிஸி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

'மாயா பஜார் 2016' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நாங்க ரொம்ப பிஸி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மாயா பஜார் 2016' திரைப்படம் தமிழில் ரீமேக்காகி வருகிறது. சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை பத்ரி இயக்கி வருகிறார். பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகி பாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ரீமேக்கிற்கு 'நாங்க ரொம்ப பிஸி' என்று தலைப்பிட்டது படக்குழு. ஆனால், ஃபர்ஸ்ட் லுக் எதையுமே வெளியிடவில்லை. இன்று (அக்டோபர் 29) திடீரென்று சமூக வலைதளத்தில் 'நாங்க ரொம்ப பிஸி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படம் திரையரங்க வெளியீடு அல்லாமல், நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும், தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

4 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்