கமல்ஹாசனின் திரைப்பயண சாதனை- ‘களத்தூர் கண்ணம்மா’ வெளியாகி 61 ஆண்டு நிறைவு

By செய்திப்பிரிவு

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61-வது ஆண்டு இன்றுடன் நிறைவு பெறுவதை அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமா, அரசியல் என இரண்டு துறைகளிலும் தற்போது கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிகர், நடன கலைஞர், வசனம், பாடல்கள், இயக்குநர் என பல பரிமாணங்களை தொட்டார். தற்போது அரசியலில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

தனது 5-வது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கமல்ஹாசன் 25-வது வயதிலேயே ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். அதற்கு முன்பே, எம்ஜிஆர், சிவாஜிகணேசன், ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்களில் நடன உதவியாளராக பணியாற்றினார். கமல்ஹாசன் தனது செல்வாக்கு உயர்ந்த சூழலில்கூட சினிமா வழியே தான் ஈட்டிய பணம் முழுவதையும் சினிமாவிலேயே உபயோகித்தார்.

சினிமாவில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் நடித்த ‘பார்த்தால் பசிதீரும்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகவே இரட்டை வேடத்தில் நடித்தவர்.

சினிமாவில் எப்படி தனக்கான இடத்தை தனித்து தக்க வைத்தாரோ அதே பாணியில் அரசியலிலும் ஈடுபடுத்துக்கொள்ள வேண்டுமென ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை உருவாக்கி பணியாற்றி வருகிறார்.

கமலின் சாதனை பயணத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருவதோடு நலத்திட்ட உதவிகள் செய்து இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்