கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை: சாம் சி.எஸ் காட்டம்

By செய்திப்பிரிவு

கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை என்று சாம் சி.எஸ் தனது ட்விட்டர் பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் நேற்று (மார்ச் 22) சுய ஊரடங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது தொடர்பான வேண்டுகோள் விடுக்கும் போது, அன்றைய தினம் மாலை 5 மணிக்கு 5 நிமிடம் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கை தட்டி, மணியோசை எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பிரதமர் மோடி.

ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் பலரும் குடியிருப்பு மாடிகளில் ஒன்று கூடியும், ரோடுகளில் கைதட்டிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும் சென்றார்கள். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகின. இதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு நோயின் பயங்கரம் தனி மனித கட்டுப்பாடு பிறர் நலன் என எந்த பொறுப்பும் இல்லாத கேவலமான சமூகத்தில் வாழ்வது வேதனை...! "எல்லாத்தயும் இழுத்து மூடுங்க” “சொன்னா கேக்குற மாதிரி தெரியல”. இந்த தருணத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் சாரின் பணி பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்