கமல் - காஜல் அகர்வால் நடிக்கும் காட்சிகள்: படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

'இந்தியன் 2' படத்தில் கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. இந்தப் படத்தில் காஜல் அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது.

கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கும் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. இது தொடர்பாக விசாரித்தபோது, கமல் - காஜல் அகர்வால் இருவருமே படத்தில் இடம்பெறும் முக்கியமான ப்ளாஷ்பேக் காட்சிகளில் நடிக்கவுள்ளனர். இதற்காக ஈவிபி அரங்கில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்கள்.

தற்போது அந்த அரங்கில் கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அரங்கில் சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதில் கமல் - காஜல் அகர்வால் இருவரும் பங்கேற்கும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை முதலில் காட்சிப்படுத்துகிறார்கள்.

இந்தக் காட்சியில் சுமார் 100-க்கும் அதிகமானோருடன் கமல் மோதவுள்ளார். இதற்கான பயிற்சியில் கடந்த 10 நாட்களாக கமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி 'அந்நியன்' படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சியை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்கிறது படக்குழு.

மேலும், இந்தப் படப்பிடிப்பின்போது எந்தவொரு புகைப்படமும் வெளியே போய்விடக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார்கள். இதற்காகப் படப்பிடிப்புத் தளத்திற்குள் படத்தின் புகைப்படக்காரர் தவிர்த்து, வேறு யாருடைய புகைப்பட கேமரா, மொபைல் போன் என எதற்குமே அனுமதியில்லை.

தவறவிடாதீர்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு

குழுமிய ரசிகர்கள் கூட்டம்: வேன் மீது ஏறி விஜய் செல்ஃபி

'அயலான்' க்ளைமாக்ஸ் காட்சிக்காகப் படக்குழுவினரின் தீவிர உழைப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்