’கைதி’ இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்?

By செய்திப்பிரிவு

இந்தி ரீமேக்காகவுள்ள 'கைதி' படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான், தீனா, ரமணா, ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்திருந்தனர்.

'பிகில்' படத்துக்குப் போட்டியாள வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் இந்தப் படத்தின் கன்னடம் மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டியிட்டனர். ஆனால், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவோ தங்களுடைய நிறுவனமே அனைத்து மொழிகளிலும் தயாரிக்கவுள்ளதாக அறிவித்தது.

இதில் முதலாவதாக இந்தி ரீமேக்கை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்திப்பட தயாரிப்பில் கால்பதிக்கிறது. மேலும், இதில் நடிக்கவுள்ளவர்கள் யாருமே இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே, இந்தி ரீமேக்கை லோகேஷ் கனகராஜையே இயக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ஆனால் இப்போதைக்கு எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

'மாஸ்டர்' படத்தை முடித்துவிட்டு, ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதால் 'கைதி' இந்தி ரீமேக்கை லோகேஷ் கனகராஜ் இயக்குவாரா என்பது விரைவில் தெரியவரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

சினிமா

55 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்