'அந்தாதூன் ரீமேக்': தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்?

By செய்திப்பிரிவு

'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் தபு கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.

இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இறுதியில், தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றினார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.

இந்த ரீமேக் படத்தை மோகன் ராஜா இயக்குவது உறுதியாகியுள்ளது. ரீமேக் இயக்கவுள்ளது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீராம் ராகவனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மோகன் ராஜா. 'அந்தாதூன்' படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்துக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது தபுவின் கதாபாத்திரம்தான்.

அதில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இதர நடிகர்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

34 mins ago

வணிகம்

49 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்