'திரெளபதி' படக்குழுவினரை வாழ்த்தினாரா அஜித்?

By செய்திப்பிரிவு

'திரெளபதி' படக்குழுவினரை அஜித் வாழ்த்தியதாகப் பரவிய வதந்திக்கு இயக்குநர் மோகன்.ஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திரெளபதி'. கூட்டு நிதி முறையில் இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மோகன்.ஜி. மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜுபின் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அன்று முதலே இணையத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் இந்தப் படம் உண்டாக்கி வருகிறது. இந்தப் படம் தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இந்தப் படத்துக்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாக, அஜித்துடன் இயக்குநர் மோகன்.ஜி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் படம் என்பதால், இதற்கு வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்பட்டது. இந்தப் புகைப்படத்துடன் பலரும் வாழ்த்துச் செய்தியைப் பகிரத் தொடங்கினார்கள்.

இந்த வதந்தி தொடர்பாக இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பதிவில், "வதந்திகளை நம்பாதீர். திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

8 mins ago

இந்தியா

48 mins ago

வர்த்தக உலகம்

56 mins ago

ஆன்மிகம்

14 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்