ஹர்பஜன் சிங்கை வைத்து வெப்சீரிஸ், படத் தயாரிப்பு: அடுத்த கட்டத்தை நோக்கி ப்ளாக் ஷீப்

By செய்திப்பிரிவு

ஹர்பஜன் சிங்கை வைத்து வெப்சீரிஸ், புதிய நிகழ்ச்சிகள் மற்றும் படத் தயாரிப்பு என அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது 'ப்ளாக் ஷீப்' குழு.

ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்ளிட்ட பல இளைஞர்கள் இணைந்து தொடங்கிய யூ-டியூப் பக்கம் 'ப்ளாக் ஷீப்'. இதில் புதிது புதிதாகப் பல விஷயங்களை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிட்டார்கள். அவை இணையத்தில் வைரலாக முன்னணி யூடியூப் சேனலாக 'ப்ளாக் ஷீப்' உருவாகியுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற பெயரில் உருவான அந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

தற்போது 'எல்லாருக்கும் நல்லாருக்கும்' என்ற வாக்கியத்தோடு 'ப்ளாக் ஷீப்' குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை ’ப்ளாக் ஷீப்' அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

'பிளாக் ஷீப்' குழு அறிவித்துள்ள புதிய நிகழ்ச்சிகள்

* திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் :- சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளுவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 12 பகுதிகளைக் கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

* ப்ளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள் :- தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தனித்துவமான விருதினை வழங்கி கவுரவித்திட விருது வழங்கும் விழா நடத்த இருக்கிறார்கள்.

* ப்ளாக் ஷீப் வேல்யூ :- பிளாக் ஷீப்பின் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் வேல்யூவில் பார்த்து ரசிக்கலாம். பிளாக் ஷீப் ஓடிடி (Black Sheep OTT) என்று சொல்லப்படும் தனி ஆப்-பை அறிமுகப்படுத்தினார்கள்.

* ப்ளாக் ஷீப் F3 :- ஜனவரி 5 2020 F 3 (FACES FOR THE FUTURE) என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு ப்ளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

* ப்ளாக் ஷீப் ரீவேம்ப் :- ஜனவரி 2, 2020 ம் தேதி முதல் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன், மேம்படுத்தப்பட்ட தரத்தில், பல புதுமைகளுடனும் பிரம்மாண்டத்துடனும் பயணிக்கத் தயாராகிவிட்டது ப்ளாக் ஷீப்.

* ஆண்பாவம் :- ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ நாயகனான சேதுராமன் நடிக்க, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

* ப்ளாக் ஷீப்பின் அடுத்த திரைப்படம் : புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் திரையுலகில் பிரபல விநியோகஸ்தரான ராக்போர்ட் நிறுவனம் வழங்க, ப்ளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப் படம் ஒன்று தயாராகிறது.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த ப்ளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க,ப்ளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்