'தர்பார்' ட்ரெய்லர் வெளியானது: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' ட்ரெய்லர் வெளியானதை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 16-ம் தேதி மாலை 6:30 மணியளவில் வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 16) மாலை 6 மணியிலிருந்தே 'தர்பார்' ட்ரெய்லர் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு சமூகவலைதளத்தில் உண்டானது. ஆனால், மும்பையில் 'தர்பார்' படத்தின் இந்தி ட்ரெய்லர் விழா தொடங்க தாமதமானது. இதனால் இணையத்தில் 6:30 மணியளவில் ட்ரெய்லர் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் கிண்டலுக்கு ஆளானது லைகா நிறுவனம்.

மாலை 7 மணியளவில் தான் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள வசனங்களான 'I AM A BAD COP', ’என்ன பாக்குற ஒரிஜினாலாவே நான் வில்லன்மா... இது எப்டி இருக்கு’ ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் 'தர்பார்' ட்ரெய்லர் வெளியீட்டுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதில் இளமையான வேடத்தில் ரஜினி நடித்திருப்பதால், பலரும் ட்ரெய்லரில் உள்ள காட்சிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து 'இவருக்கு வயதாகிவிட்டதா' என்ற கருத்துகளுடன் வெளியிட்டு வருகிறார்கள். பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருவதால் ''#DarbarTrailer என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

33 mins ago

சினிமா

49 mins ago

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

59 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

மேலும்