’பொன்னியின் செல்வன்’ அப்டேட்: பிரிகிறதா கூட்டணி?

By செய்திப்பிரிவு

'பொன்னியின் செல்வன்' படத்தில் மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவழியாக 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களை இறுதி செய்து படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார் இயக்குநர் மணிரத்னம். முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கவுள்ளவர்கள் பட்டியலை நேற்று (டிசம்பர் 13) அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு.

நடிகர்கள், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், மேக்கப், ஆடை வடிவமைப்பு என அனைவரின் பெயர்களும் வெளியிடப்பட்டன. ஆனால், பாடலாசிரியர் யார் என்பதைப் படக்குழு அறிவிக்கவில்லை. இதனால், இணையத்தில் பெரும் விவாதம் உண்டானது.

எப்போதுமே மணிரத்னம் படங்கள் என்றாலே பாடல்களை வைரமுத்துதான் எழுதுவார். மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து கூட்டணி பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது. இந்தப் பட்டியலில் வைரமுத்து பெயர் இல்லாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மணிரத்னம் படத்தில் வைரமுத்து இல்லாதது குறித்து, பலரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், படக்குழுவினர் தரப்பில் 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு பாடல்கள் எழுதுவது யார்? என்பதை அறிவிக்கும் வரை இம்மாதிரியான தகவல்கள் உலவும் என்பதில் சந்தேகமில்லை.

'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம், கார்த்தி, 'ஜெயம்' ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார்.

வசனகர்த்தாவாக ஜெயமோகன் , இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

2 mins ago

இணைப்பிதழ்கள்

13 mins ago

தமிழகம்

24 mins ago

சினிமா

42 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்