'எம்ஜிஆர் மகன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுமையான படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து வந்தார்கள். இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், இசையமைப்பாளராக அந்தோணி தாசனும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.

'எம்ஜிஆர் மகன்' படப்பிடிப்பை முடித்துவிட்டதால், தற்போது இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்