மீண்டும் பொங்கல் ரிலீஸில் ரஜினி படத்துடன் போட்டியா? சத்யஜோதி நிறுவனம் திட்டம்

By செய்திப்பிரிவு

2019-ம் ஆண்டு சென்டிமெண்ட்டை, 2020-ம் ஆண்டிலும் தொடர சத்யஜோதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படங்கள் ரஜினி நடித்த 'பேட்ட' மற்றும் அஜித் நடித்த 'விஸ்வாசம்'. இதில் 'விஸ்வாசம்' படத்தைத் தயாரித்தது சத்யஜோதி தயாரிப்பு நிறுவனம். இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அஜித், நயன்தாரா, அனைகா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'தர்பார்' வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தாண்டைப் போலவே அடுத்தாண்டும் ரஜினி படத்துக்குப் போட்டியாக தனுஷ் நடித்த 'பட்டாஸ்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது சத்யஜோதி நிறுவனம். துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். சிநேகா, மெஹ்ரீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதரக் காட்சிகளின் இறுதிக்கட்டப் பணிகள் முடித்து தயாராக வைத்துள்ளது படக்குழு. தற்போது படமாக்கும் காட்சிகளைத் தயார் செய்து இணைத்தால், மொத்த படமும் தயாராகிவிடும். இதனால் 2019-ம் ஆண்டின் பொங்கல் சென்டிமெண்ட்டை, 2020-ம் ஆண்டும் தொடர்ந்தால் என்ன என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது.

மேலும், 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு 8 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் 'தர்பார்' மற்றும் 'பட்டாஸ்' வெளியாக வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. இதனிடையே புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படமும் 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

கருத்துப் பேழை

33 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

17 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்