சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கும்பளங்கி நைட்ஸ்’ ஷான் நிகம்?

By செய்திப்பிரிவு

சீனு ராமசாமி இயக்கவுள்ள புதிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஷான் நிகம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்தார். உதயநிதி தயாரித்த இந்தப் படம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘மாமனிதன்’ படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஷாஜி சென், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா மூவரும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். அத்துடன், யுவனே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சீனு ராமசாமி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘கும்பளங்கி நைட்ஸ்’ மற்றும் ‘இஷ்க்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்த ஷான் நிகம், இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. எனவே, இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஷான் நிகம். ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பில் அம்பேத் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இவர் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜிப்ஸி’ படத்தைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்