டிராஃபிக் ராமசாமிக்கு மதிப்பு கொடுத்திருந்தால்... : ரோகிணி கருத்து

By செய்திப்பிரிவு

டிராஃபிக் ராமசாமிக்கு மதிப்பு கொடுத்திருந்தால், சுபஸ்ரீயின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று ரோகிணி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க, சாலையின் இருபுறமும், சாலைத் தடுப்புகளிலும் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த சாலையில் பைக்கில் பயணித்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் படுகாயம் அடைந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், நேற்று (செப்டம்பர் 14) சமூக வலைதளத்தில் டிராஃபிக் ராமசாமி இதற்காகத் தானே நீண்ட காலமாகப் போராடி வருகிறார் என்று பதிவிடத் தொடங்கினார். சிலர் அவருடைய போராட்டப் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நடிகை ரோகிணி தனது ட்விட்டர் பதிவில்,"டிராஃபிக் ராமசாமியின் கோரிக்கைகளைக் கேலி செய்யாமல் அவற்றுக்கு நாம் மதிப்பு கொடுத்திருந்தால் சுபஸ்ரீயின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

வணிகம்

43 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்